அழுகிப்போன இலங்கைக்குப் புனுகுபூசும் இராம்!/  ‘இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பன்னாட்டுப் பங்களிப்புடன் கூடிய நடுநிலையான  உசாவல் நடத்தப்பட வேண்டும்’ –  என்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசின்  இசைவுடனேயே, ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்றுவரை, அப்படி ஓர் உசாவல் நடக்கக்கூடும் என்பதற்கான அறிகுறி கூட இல்லை.   சிங்களப் படையினரின் கொலைவெறியும் காமவெறியும் தொடர்ந்து அம்பலமாகிவந்த நிலையில்,  பன்னாட்டு அளவில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஏற்பட்ட நெருக்கடியை நீர்த்துப்போக வைப்பதற்காகவே, அந்தத் தீர்மானத்தைத்…