இருந்தபோது நாடு தொழுதது! இறந்த பின்பு நாடு அழுதது! – கவிஞர் வாலி

இருந்தபோது நாடு தொழுதது! இறந்த பின்பு நாடு அழுதது!   பொன்மனச்செம்மலே! என் பொழுத்து புலரக் கூவிய சேவலே! உனக்கென்று நான் எழுதிய முதல் வரியில்தான் உலகுக்கு என் முகவரி தெரிய வந்தது!   என் கவிதா விலாசம் உன்னால்தான் விலாசமுள்ள கவிதையாயிற்று!   இந்த நாட்டுக்குச் சோறிடு முன்னரே என் பாட்டுக்குச் சோறிட்டவன் நீ!   என்னை வறுமைக் கடல்மீட்டு வாழ்க்கைக் கரை சேர்த்த படகோட்டியே! கருக்கிருட்டில் என் கண்களில் தென்பட்ட கலங்கரை விளக்கமே!   நான் பாடிய பாடல்களை நீ பாடிய…

புரட்சி நடிகர் இருபதாம் நூற்றாண்டின் இனிய பாரி – சி.இலக்குவனார்

இருபதாம் நூற்றாண்டின் இனிய பாரி “கலைஞருள் வள்ளல், காசினி போற்றும் வள்ளலுள் கலைஞர்; வருந்தும் எவர்க்கும் ஒல்லும் வகையில் உடனே உதவும் புரட்சி நடிகர், பொல்லாங்கெதனையும் நடிப்பினுங்கொள்ளா நடிகவேள், நானிலம் இனிதே வாழ என்றும் எண்ணி அன்பும் அருளும் அணியாய்ப் பெற்றவர் இவரால் உயர்ந்தார் எண்ணிலர் என்றும் அண்ணா வழியில் அணியுறச் செல்லல் முந்துறும் தளபதி, மூவா இளைஞர் இராமச்சந்திரன் எனும் பெயரால் எனக்கும் அண்ணன் எவர்க்கும் தோழன் ஒப்பிலாப் பண்பினர், உலகம் போற்ற நடிக்கும் வித்தகர், நடிப்போர் சூழமும் ஐம்பெருங் குற்றமும் அணுகா…

முன்னாள் முதல்வர் எம்(ஞ்)சியார் நினைவு நாள்

முன்னாள் முதல்வர் எம்(ஞ்)சியார் நினைவு நாள் தேவதானப்பட்டியில் முன்னாள் முதல்வர் மக்கள்திலகம் எம்ஞ்சியார் நினைவு நாளையொட்டி அவரது தீவிர நம்பிக்கையாளர்கள் மொட்டையடித்து அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர்.   தேவதானப்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஞ்சியார் சிலை உள்ளது. இச்சிலைக்குப் பெரியகுளம் ஒன்றியப் பெருந்தலைவரும், ஒன்றியச் செயலாளருமான செல்லமுத்து மாலை அணிவித்தார். அப்போது அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை மொட்டையடித்துக்கொண்டனர்.   மாலை அணிவித்தலின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.பெரியவீரன், தேவதானப்பட்டி பேரூர் செயலாளர் சுரேசு, தேவதானப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் பி.ஆர்….