திருக்குறளில் வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள் 3 – வெ.அரங்கராசன்
(ஆனி 20, 2046 / சூலை 05, 2015 தொடர்ச்சி) 3 16.0. வணிகவியல் வரைவிலக்கணம் 16.1. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின் [0120] . வணிகத்திற்கு உரிய இலக்கணத்தை கடைப்பிடித்துப் பிறர் பொருளையும் தம் பொருள் போல மதித்து வணிகம் செய்வார் வணிகம், பெருகும்; பணப்பயனும் பெருகும். 17.0. இத் திருக்குறட் பா இவ் அதிகாரத்தில் ஏன்….? நடுவு நிலைமை அதிகாரத்தில் 0120 — ஆவது திருக்குறட் பாவைத் திருவள்ளுவர் ஏன் அமைத்தார்…..? …