திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 46 செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்  (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 412) செவிக்கு உணவாகிய கேள்வியறிவு இல்லாதபோது வயிற்றுக்கும் சிறிது உணவு அளிக்கப்படும் என்கிறார் திருவள்ளுவர். உணவு அளவு, உணவின் தன்மை ஆகியவற்றிற்கும் காம உணர்விற்கும் தொடர்பிருப்பதாகப் பாலியற் கல்வியாளர் முனைவர் மாரியன்…