ஈழ இளையோரே நெறி தவறாதீர்!
ஈழ இளையோரே நெறி தவறாதீர்! 2009 மே காலப்பகுதி வரை தமிழ் மக்களின் வாழ்விலும் வளத்திலும் கோலோச்சிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம், இலங்கைக்குள் செயல்பாட்டு தளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னரான சூழலில், தமிழ்ப் பண்பாட்டுக் குமுகம் ‘ தன்னொழுக்கம் – தற்கட்டுப்பாட்டை’ இழந்து, தரம் தாழ்ந்துவரும் மோசமான நிலைமைகள் மிகுந்த கவலையையும் – பயத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. ‘2009 மே’க்குப்பின்னர் கடந்த ஏழு வருடங்களாகத் தாராளமாகப் புழக்கத்தில் விடப்பட்டுள்ள போதைப்பொருள்கள் – அருவருக்கத்தக்க(ஆபாசக்) காணுரைகள், மடைதிறந்து விடப்பட்டுள்ள கொலை, கொள்ளை, வழிப்பறி, குடும்ப வன்முறைகள்,…
மாமனிதர் இரவிராசின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – காணுரை (Video)
மாமனிதர் இரவிராசின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – காணுரை (Video) மகிந்த இராசபக்ச அரசின் கைக்கூலிகளினால் கடந்த 2006ஆம் ஆண்டு கொழும்பில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டவர் மாமனிதர் நடராசா இரவிராசு. அன்னாரது 10ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, யாழ்ப்பாணம் கந்தர்மடம் மணல்தரை வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் ஐப்பசி 25, 2047 / 10.11.2016, வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. கட்சியின் நல்லூர்க் கோட்ட இளைஞரணித் தலைவர் மயூரன் தலைமையில் நிகழ்வுகள் தொடங்கின. குறித்த…