கலைச்சொல் தெளிவோம்! 105. கீறல் வெருளி 106. குருதி வெருளி107. கூட்ட வெருளி 108. கோழி வெருளி
கலைச்சொல் 105.கீறல் வெருளி-Amychophobia பொதியில் முனிவன் புரை வரைக் கீறி (பரிபாடல் : 11.11) என வருகிறது. கீறு>கீறல்+வெருளி கீறல் வெருளி-Amychophobia கலைச்சொல் 106. குருதி வெருளி-Hemophobia/Hematophobia குருதி என்னும் சொல்லை 66 இடங்களிலும், குருதித்து(1), குருதிய(1) ஆகியசொற்களையும் சங்கப்புலவர்கள் கையாண்டுள்ளனர். குருதியைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய குருதி வெருளி-Hemophobia/Hematophobia கலைச்சொல் 107. கூட்ட வெருளி-Ochlophobia/Demophobia/Enochlophobia ஞாயிறு பட்ட அகன்று வரு கூட்டத்து (பதிற்றுப்பத்து : 72.12) மாற்று அருந் தெய்வத்துக் கூட்டம் முன்னிய (பதிற்றுப்பத்து : 88.24)…