கிரேக்க, எகிப்திய நாட்டுத் தொல்பழம் நாகரிகத்தின் வடிவமைப்பாளர்கள் யாவர்? காரணகர்த்தர் யாவர்?. அவை ஆரியமொழி எதையும், அதாவது ஆரிய அடிப்படை எதையும் பேசவில்லை. அங்ஙனமாகவே, அவை தொல்பழங்காலத் தமிழ் நாகரிக மரத்தின் கிளைகளே என்பதுதான் கொள்ளக் கிடப்பதாம். கிரீட், பித்தளை, செப்பு நாகரிகத்திலிருந்து எத்தகைய இடையூறும் இல்லாமல் இரும்பு நாகரிகத்துக்குச் சென்றுவிட்டது. இந்தியாவிலும் நடந்தது சரியாக இதுவே. பித்தளை நாகரிகம் என்பது போலும் ஒரு நாகரிகம், இந்தியாவில் இருந்திருக்கவில்லை. இச் சூழ்நிலைகளை யெல்லாம் கணக்கில் கொண்டு கூர்மையாக ஆராய்ந்து பார்த்தால், மத்தியத் தரைக்…