குமுக வளர்ச்சி 4 – முனைவர் இராம.கி.
இதுவரை கூறிய இந்த உள்கட்டுமானங்களை எல்லாம் நாம் சரிசெய்யவில்லையென்றால், நிலத்தடி நீர் கிடைப்பதிற் சிக்கல் ஏற்படுமென்றால், நம் ஊர்ப்பக்கங்களில் ஏற்படும் வீட்டுமனைத் தேவைகள் வெடித்துச் சிதறும் குமிழ்போல ஆவது வெகுதொலைவில் இல்லை. இப்பொழுது நம் ஊர்கள் சற்று தகைவோடு(stress)தான் உள்ளன. நம் ஊர்ப்பக்கங்களில் பொதுவாகவுள்ள பொருளியல் உந்துகளைச் சற்று எண்ணிப்பார்ப்போமா? இவற்றில் நிறைகளும் இருக்கின்றன; குறைகளும் இருக்கின்றன. முதலில் நிறைகள்: சுற்றுவட்டாரத்திலுள்ளோர் தேடிவந்து வாங்கும் நிலைவெள்ளிப் பாத்திரங்களின் கணிசமான உருவாக்கமும் விற்பனையும் அதே போல வைர, தங்க நகைகளின் உருவாக்கமும், விற்பனையும், செட்டிநாட்டுப் பருத்திச்…