கலைச்சொல் தெளிவோம்! 87. அனைத்து வெருளி
87. அனைத்து வெருளி-Panophobia/Pantophobia/ Panphobia/ Omniphobia அனைத்து என்பது இத்தன்மையது என்னும் பொருளில்தான் சங்கப்பாடல்களில் வருகிறது. எல்லாவற்றையும் குறிக்க அனைத்தும் என்றுதான் பயன்படுத்தி உள்ளனர். அனைத்தும், புணர்ந்து உடன் ஆடும் இசையே; அனைத்தும், (மதுரைக் காஞ்சி : 266) கடிப்பகை அனைத்தும், கேள்வி போகா (மலைபடுகடாம் : 22) அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின், (பரிபாடல் : 3:68) அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி, (அகநானூறு : 378:16) இனைத்து என்போரும் உளரே; அனைத்தும் அறி அறிவு ஆகாச் செறிவினை…