சங்க இலக்கியக் காலத் தொடக்கம் கி.மு. ஆயிரத்திற்கு முற்பட்டது.
சங்க இலக்கியக் காலத் தொடக்கம் கி.மு. ஆயிரத்திற்கு முற்பட்டது. – இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர், அகரமுதல <www.akaramuthala.in> மின்னிதழ், thiru2050@gmail.com சங்க இலக்கியங்கள் இனிமைச் சிறப்பும்சாதி, சமய, இன வேறுபாடற்ற பொதுமைச்சிறப்பும் இன்றைக்கும் பொருந்தும் புதுமைச் சிறப்பும் மிக்கன. இவை குறித்து, “வாழ்வியல் முன்னேற்றத்துக்கு வழி வகுப்பவை; பொருட் சிறப்பும், கருத்துச் செறிவும், சொல்லினிமையும் வாய்ந்தவை; அவை அகத்திணை, புறத்திணை என இருபாற்பட்டுப் பெரும்பாலும் காதல், வீரம், குறித்துப் பாரித்துரைப்பினும் வையத்துள் வாழ்வாங்கு வாழும் அறநெறிகளை வாய்மை, நட்பு, மானம், தாளாண்மை முதலியவற்றை…