வெருளி அறிவியல் 34 – 37 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி அறிவியல் – 31-33 தொடர்ச்சி) வெருளி அறிவியல் 34 – 37 34. ஆண்வெருளி– Androphobia/Arrhenphobia/Hominophobia ஆண்களைக் கண்டால் ஏற்படும் அச்சம் ஆண் வெருளி. ஆண்களைக் கண்டு அஞ்சுவது குறித்துக் கூறுவதால் இது பெண்களுக்கு வரும் எனப் புரிந்து கொள்ளலாம். ஆடவர் தங்களை அடக்கி ஒடுக்குவார்கள், துன்பம் இழைப்பார்கள், தவறாக நடந்து கொள்வார்கள், தவறான முறையில் பழகி அவப்பெயர் ஏற்படுத்துவார்கள் என்று பல வகைகளில் ஆண்கள் மீது வரும் பேரச்சம். இத்தகையோர் ஆண்கள் மீதுள்ள அச்சத்தால் பொது வண்டிகளில் ஏறாமல் பெண்கள் வண்டிகளில்…
வெருளி அறிவியல் 31 – 33 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி அறிவியல் முந்தைய பகுதி தொடர்ச்சி) வெருளி அறிவியல் 31 – 33 31.ஆடை வெருளி – Vestiphobia ஆடை குறித்த அளவுகடந்த பேரச்சம் ஆடை வெருளி. குழந்தைப்பருவத்தில் உடை உடுத்துவது குறித்த எரிச்சல் விருப்பமின்மை முதலியன வளர்ந்து இத்தகைய பேரச்சத்தை உருவாக்குவதும் உண்டு. படைத்துறை முதலான சீருடைத் துறைகளில் பணியாற்றுவோருக்கு ஆடை வெருளி உள்ளது. தாய் அல்லது தந்தைக்கு ஆடை வெருளி இருந்தால் பிள்ளைகளுக்கும் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர். புதுவகை ஆடைகளைக் கண்டு எரிச்சலுற்று ஆடை வெருளிக்கு ஆளாவோரும் உள்ளனர். vestis…
வெருளி அறிவியல் – 9 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி அறிவியல் 8 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல் – 9 27. அறிவுவெருளி-Epistemophobia/Gnosiophobia அறிவு தொடர்பில் எழும் தேவையற்ற மிகையான பேரச்சமே அறிவுவெருளி. சிலருக்குப் புதியதாக எதைக் கற்க / அறிய வேண்டுமென்றாலும் பேரச்சம் வரும். சிலருக்குக் குறிப்பிட்ட ஒன்றைக் கற்க அல்லது அறிய மட்டும் பேரச்சம் வரும். பள்ளிக்கூடம் செல்ல பிள்ளைகள் அடம்பிடித்து மறுப்பதும் அறிவு வெருளிதான். பலர் படிப்படியாக இதிலிருந்து விடுபட்டு விடுகின்றனர். சிலர் இதிலிருந்து விடுபடாமல் முழுமையான அறிவு வெருளிக்கு ஆட்பட்டுவிடுகின்றனர். gnos / epistemo ஆகிய கிரேக்கச்சொற்களின்…
வெருளி அறிவியல் – 8 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி அறிவியல் 7 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல் – 8 23. அழிவு வெருளி-Atephobia அழிவு பற்றிய இயல்பிற்கு மீறிய பேரச்சம் அழிவு வெருளி அழி(74), அழிக்குநர்(1), அழிக்கும்(6), அழித்த(8), அழித்தரும்(1), அழித்தலின்(2), அழித்தான்(1), அழித்து(15), அழிதக்கன்று(2), அழிதக்காள்(1), அழிதக(6), அழிதகவு(1), அழிதரு(2), அழிந்த(14), அழிந்தன்று(1), அழிந்தனள்(1), அழிந்து(37), அழிந்தோர்(3), அழிப்ப(3), அழிப்படுத்த(1), அழிபவள் (1), அழிபு(4), அழிய(26), அழியர்(1), அழியல்(2), அழியலன்(1), அழியா(3), அழியாதி(1), அழியாது(1), அழியின்(1), அழியுநர்(1), அழியும்(4), அழிவது(3), அழிவல்(1), அழிவு(14), அழீஇ(1) ஆகிய சொற்கள் அழிவு தொடர்பாகச்…
வெருளி அறிவியல் – 7 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி அறிவியல் 6 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல் – 7 18. அயலிந்தியர் வெருளி-Mikatikoindicaphobia அயல்நாட்டில் வாழும் இந்தியர்கள் (NRI) தொடர்பில் ஏற்படும் தேவையற்ற அச்சம் அயலுறை இந்தியர்கள் வெருளி. சுருக்கமாக அயலிந்தியர் வெருளி எனலாம். வெளிநாட்டிலிருந்து செல்வம் திரட்டி வந்து, இங்கே நம் தொழிலைச் சிதைப்பார்கள், செல்வத்தைத் தேய்ப்பாரகள், செல்வாக்கை ஒடுக்குவார்கள், வளர்ச்சியை அழிப்பார்கள் என்றெலலாம் தேவையற்ற கவலையும் அளவு கடந்த வெறுப்பும் கொள்வர். Indica என்பது இலத்தீனிலும் கிரேக்கத்திலும் இந்தியாவைக் குறிப்பிடும் சொல். 00 19. அரசியலர் வெருளி-Politicophobia/ civiliphobia…
வெருளி அறிவியல் – 6 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி அறிவியல் 5 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல் – 6 12. அம்மண வெருளி Dishabiliophobia/Gymnophobia /Nudophobia அம்மணம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அம்மண வெருளி. அம்மணமாக இருப்பது அல்லது தன்னுடைய அம்மண நிலையைப் பிறர் பார்ப்பது பிறரின் அம்மண நிலையைப் பார்ப்பது தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் கொண்டிருப்பர். gymnos என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உடுப்பற்ற எனப் பொருள். (gymnasion என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உடற்பயிற்சிக்கான இடம் எனப் பொருள். gymnasein என்றால் உடையின்றிப் பயிற்சி எனப் பொருள்.) ஆடையிலி வெருளி(Dishabiliophobia),…
வெருளி அறிவியல் – 5 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி அறிவியல் 4 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல் – 5 7. அணுஆயுத வெருளி-Nucleomituphobia அணுஆயுதங்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் அணுஆயுத வெருளி. அணுஆயுதக்கருவிகள் இல்லாவிட்டாலும் இருந்து பயன்படுத்தப்படாமல் இருந்தாலும், அவை பயன்படுத்தப்பட்டுப் பேரழிவுகள் ஏற்படும் என்று கருதுவதால் உருவாகும் அச்சம் அணுஆயுத வெருளி. அமெரிக்கத் தலைவர்களுக்கு ஈராக்கு மீது ஏற்பட்டஅச்சம் இத்தகையதுதான். என்றாலும் அணுஆயுதக் கருவிகள் இல்லை என்றறிந்த பொழுதும் இருப்பதாகப் பிறரை அச்சுறுத்தி அந்நாட்டை அழிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது. போர் முழக்கங்களும் அமைதியின்மையும் வல்லரசு ஆசையும் நிறைந்த உலகில்…
வெருளி அறிவியல் – 3 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி அறிவியல் 2 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல் – 3 ‘தெனாலி’ படம் பார்த்தவர்களுக்குப் பின்வரும் பயங்கள்பற்றிய பேச்சு நினைவிருக்கும்: “எனக்கு எல்லாம் பயமயம். … காலால் உதைத்தால் காலில் அடிபடும் என்ற பயம் எனக்கு; கவிதை பயம் எனக்கு; கதை பயம் எனக்கு; பீமனின் கதைக்கும், அனுமனின் கதைக்கும் பயம்; உதைக்கும் பயம்; சிதைக்கும் பயம்; கதவு பயம் எனக்கு; கொஞ்சம் திறந்த கதவும் பயம், முழுதாக மூடின கதவும் பயம், பூட்டு போட்ட கதவென்றாலும் பயம் எனக்கு; காடு பயம்…
வெருளி அறிவியல் – 2 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி அறிவியல் 1 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல் – 2 (Science of fear or Phobia) (அச்ச நோய் வகைகள் எனப்படும் வெருளி வகைகள்) ஒரேவகை வெருளி ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. ஒரே நேரத்தில் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு வல்லுநர்கள் ஆராய்வதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றை எல்லாம் ஒரே வகையாகக் குறித்துள்ளேன். நான் இதற்கு முன்பு வெருளி வகைகளைக் குறிப்பிட்டுப் பட்டியல் அளித்துள்ளேன். எனினும் இப் பொழுது அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றில் சேர்த்து மாற்றியுள்ளேன். ஆங்கிலத்தில், மருத்துவர்கள்…
கலைச்சொல் தெளிவோம்! 84. அழிவுவெருளி-Atephobia
84. அழிவுவெருளி-Atephobia அழி(74), அழிக்குநர்(1), அழிக்கும்(6), அழித்த(8), அழித்தரும்(1), அழித்தலின்(2), அழித்தான்(1), அழித்து(15), அழிதக்கன்று(2), அழிதக்காள்(1), அழிதக(6), அழிதகவு(1), அழிதரு(2), அழிந்த(14), அழிந்தன்று(1), அழிந்தனள்(1), அழிந்து(37), அழிந்தோர்(3), அழிப்ப(3), அழிப்படுத்த(1), அழிபவள் (1), அழிபு(4), அழிய(26), அழியர்(1), அழியல்(2), அழியலன்(1), அழியா(3), அழியாதி(1), அழியாது(1), அழியின்(1), அழியுநர்(1), அழியும்(4), அழிவது(3), அழிவல்(1), அழிவு(14), அழீஇ(1) ஆகிய சொற்கள் அழிவு தொடர்பாகச் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. மனையியலில் destroy அழி, நிலைகுலை, தகர எனவும், பொறிநுட்பவியலில் destroyer அழிகலன் எனவும் பயன்படுத்துகின்றனர். எனினும் அழிவு பற்றிய…
கலைச்சொல் தெளிவோம்! 80-83 கூர்மை தொடர்பான வெருளிகள்
80-83 கூர்மை தொடர்பான வெருளிகள் கூர் (109), கூர்த்த (1), நுனி (1) ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. முனை என்பது போர்க்களப் பகுதியைக் குறிக்கின்றது. நுனை (17) கூரிய முனையைக் குறிக்கின்றது. அயில்(9) கூர்மையையும், கூர்மையாக உள்ள வேலையும் குறிக்கின்றது. வை (49) என்னும் சொல் கூர்மை என்னும் பொருளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. கூர்முனையைக் குறிக்க வைந்நுதி என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஊசி அல்லது கூரிய முனை உடைய பொருள்களைப் பார்த்தால் ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் அயில்/ ஊசி வெருளி-Enetophobia கூர்…
கலைச்சொல் தெளிவோம்! 79. அயலார் வெருளி-Xenophobia/Zenophobia
79. அயலார் வெருளி-Xenophobia/Zenophobia அயலார் + வெருளி அயல்(27), அயலிலாட்டி(3), அயலிற்பெண்டிர்(1), அயலார்(2), அயலோர்(3), அயல(9), அயலது(25) ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களி்ல் பயன்படுத்தப்பட்டுள்ளன. அயலாரைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய அயலார் வெருளி-Xenophobia/Zenophobia – இலக்குவனார் திருவள்ளுவன்