30 :சேணாகம்- Pluto ; சேண்மம்- Neptune     சேய்மையன் (1), சேண் (96),சேணன் (1),சேணோர் (1),சேணோன் (9)  எனச் சேண் அல்லது அதனடிப்படையிலான சொற்கள் சங்க இலக்கியங்களில் பயின்றுள்ளன. கண்ணுக்கெட்டாத தொலைவு,  நினைவிற்கெட்டாத தொலைவு என மிகுதொலைவை இவை குறிக்கின்றன. இவற்றின் அடிப்படையில் மிகுதொலைவிலுள்ள கோள்களுக்குப் பெயர் சூட்டலாம். சேண்விளங்குசிறப்பின்ஞாயிறு (புறநா. 174, 2) எனத் தொலைவிலுள்ள ஞாயிறு குறிக்கப்பெறுகிறது.   புளூட்டோ- Pluto என்பதனையும் நெப்டியூன் – Neptune என்பதனையும் ஒலி பெயர்ப்பில்  அல்லது  தொலைவிலுள்ள கோள் என்றே விண்ணியலிலும்…