தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள் ! தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். நடிகர் விசய் அரசியலில் முழுமையாக ஈடுபடும் வண்ணம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். தமிழ் நாட்டின் நலன், தமிழ் மக்கள் முன்னேற்றம், தமிழ்மொழி வளர்ச்சி முதலியவற்றில்  கருத்து செலுத்தி வாகை சூட வாழ்த்துகிறோம். இவர் கட்சியைத் தொடங்குகிறார் எனச் செய்திகள் வந்த பொழுதே இவர் ‘விசய்’ என்று இல்லாமல் வெற்றி என்றோ வாகை என்றோ வரும் வகையில் பெயர் சூட்டினால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம்…

  இந்தித்திணிப்பு : அரசு குருடாகவும் செவிடாகவும் இருக்கலாமா?  – இலக்குவனார்திருவள்ளுவன்

இந்தித்திணிப்பு : அரசு குருடாகவும் செவிடாகவும் இருக்கலாமா? நாட்டு மக்கள் குறைகளை அரசு திறந்த கண் கொண்டு பார்க்க வேண்டும்; மூடாச்செவி கொண்டு கேட்க வேண்டும். மூடிய கண்ணினராயும் காதினராயும் இருப்பின் மக்கள் துன்புறுவதை அரசு அறிந்து களைய வாய்ப்பில்லாமல் போய்விடும். அதனால் அந்த அரசு நிலைக்காமல் போய்விடும். எனவேதான், அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை.   (திருக்குறள் – 555) என்றார் தெய்வப்புலர் திருவள்ளுவர்.     மக்களுக்குக் கிடைக்கவேண்டியவை கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமை அல்லது காலம் கடந்தும் கிடைக்காமை,…

புதுமை இலக்கியத்தென்றல், இலக்குவனார் நினைவரங்கம்

புதுமை இலக்கியத் தென்றல் தமிழுரிமைப் போராளி சி.இலக்குவனார் நினைவரங்கம் ஆவணி 18  , 2054 / 04.09.2023 ஞாயிறு மாலை 6.30 அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை தலைமை: அரிமா தா.கு.திவாகரன் வரவேற்புரை: செல்வ.மீனாடசி சுந்தரம் நினைவுரை: பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் நன்றியுரை: இராவணன் மல்லிகா

இலக்குவனாரை மக்கள் மறக்கவில்லை, அரசு நினைக்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனாரை மக்கள் மறக்கவில்லை, அரசு நினைக்கவில்லை! இன்றைய நாள் (03.09.2023) தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள். இதனை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்பெறுகிறது. பொதுவாக இலக்குவனார் என்றால் பன்முக முதன்மை எண்ணங்கள் வரும். பள்ளியில் படிக்கும் பொழுதே தனித்தமிழில் கவிதைகள் எழுதியவர். புலவர் படிப்பு மாணாக்கராக இருக்கும்போது ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும் தனித்தமிழ்ப்பாவியம் படைத்தவர். மாணாக்க நிலையில் தனித்தமிழ்ப்பாவியம் படைத்தவர்களில் முதலாமவராக இலக்குவனார் விளங்குகிறார். அது மட்டுமல்ல. இது மொழிபெயர்ப்புத் தழுவல் படைப்பாகும். அந்த வகையில் படிக்கும்…

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 4.

(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:3. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல்  (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.)                 ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை                 நோற்பாரின் நோன்மை யுடைத்து (48)    ஆற்றின் ஒழுக்கி=நல்நெறியில் பிறரை ஒழுகச் செய்து அறன் இழுக்கா=அறநெறியினின்று மாறுபடாத, இல் வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, நோற்பாரின்=தவம் செய்வாரின் வாழ்க்கையைவிட, நோன்மை யுடையத்து=தாங்கும் தன்மை மிகுதியும் உடையது.    இல்லற நெறியை மேற்கொண்டு மனையாளொடு வாழ்கின்றவர் பெரியவரா? இல்லறத்தை வெறுத்துத்…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  06 –  சி.இலக்குவனார்

[இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  05  தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  06   தொல்காப்பியர் காலத் தமிழ்நாடு சேரர் சோழர் பாண்டியர் எனும் முக்குலத்தினரால் ஆளப்பட்டு அம் மூவர் பெயரால் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என அழைக்கப்பட்டு வந்துள்ளது.  கொங்குநாடு என்ற பிரிவோ தொண்டை மண்டிலம் என்ற நாடோ அன்று தோன்றிலது.  வடவேங்கடத்திற்குத் தெற்கே கன்னட நாடும் துளு நாடும் தோன்றில. பிற்காலத்தில் மலையாள நாடு என்று அழைக்கப்பட்டது, அன்று சேரநாடு எனும் பெயரோடு…

பேராசிரியர் சி.இலக்குவனார் 108ஆவது பிறந்தநாள் பெருமங்கலம்,திருநகர், மதுரை 625006

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.   தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 108ஆவது பிறந்தநாள் பெருமங்கலம்   கார்த்திகை 01, 2048 / நவம்பர் 11, 2017 காலை 9.00 இலக்குவனார் இல்லம் முன்பு 4ஆவது நிறுத்தம், திருநகர், மதுரை 625006       9 ஆம் வகுப்பில்  பள்ளி அளவில் முதல் 10 இடங்கள் பெற்று 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணாக்கியருக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நூல்கள் பரிசாக வழங்கப்பெறுகின்றன. தமிழன்பர்கள் புகழுரை ஆற்றுவர். அன்புடன் இரா.பா.முருகன்…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  02–  சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 01 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  02–  சி.இலக்குவனார் ஆ. பதிப்புரை  & நன்றியுரை   பதிப்புரை(2002)      தமிழின் தொன்மைச் சிறப்பையும், முதன்மைச் சிறப்பையும், தமிழ் மக்களின் விழுமிய பண்பாட்டையும் உயரிய நாகரிகத்தையும்  உலகுக்கு உணர்த்துவன சங்க இலக்கியங்களே!   சங்க இலக்கியங்களை உலக ஆராய்ச்சியாளர்கள் அறிந்தால்தான் தமிழ் உலகமொழிகளின் தாய் என்பதை உணர்வர் என்பதை வலியுறுத்தி வந்தவர் பெரும் பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார். அறிஞர் கால்டுவல் …