திருப்புமுனைத் தேர்தலில் தி.து.வி.தினகரனுக்கு வாழ்த்து! – இலக்குவனார் திருவள்ளுவன்
திருப்புமுனைத் தேர்தலில் தி.து.வி.தினகரனுக்கு வாழ்த்து! சென்னை, இராதா கிருட்டிணன் நகர் இடைத்தேர்தல், போட்டியிடும் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிற்கும் மத்திய ஆளுமைக்கும் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடியது. தேர்தல் என்றாலே ஒவ்வொருவரின் வெற்றி, தோல்வியை முடிவு கட்டுவதாக அமையும். ஆனால், இந்த இடைத்தேர்தல் போட்டியிடும் சில கட்சிகளின் வாழ்வா தாழ்வா என்பதையும் முடிவுகட்டக்கூடியதாக உள்ளது. எனவே, தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதிக்கத் துடிக்கும், முறைமுக ஆட்சியையாவது திணிக்க நினைக்கும் பா.ச.க.விற்கும் இதன்முடிவு இன்றியமையாததாகிறது. இத்தொகுதியில் அதிமுக பல முறை வென்றிருந்தாலும் அக்கட்சிக்கான தொகுதியாகக் கூற…