(தொடர் கட்டுரை)   தகவல் அறியும் உரிமைச்சட்டம் குடிமக்களுக்குச் செலவில்லாத எளிய வழியில் அரசிடமிருந்து வேண்டிய செய்திகளை/ புள்ளிவிவரங்களை, அவரவர் தேவைக்கேற்ப அறிய உரிமை அளிக்கிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு உரிய துறையில் தகவல் அளிக்காவிட்டால் குறிப்பிட்ட அதிகாரி தண்டத்தொகை கட்டவேண்டும். அண்மையில் நடந்த ஆய்வின்படி 2014 ஆம் ஆண்டு மத்திய செய்தி அளிக்கும் ஆணையாளர் மாதபூசி சிரீதர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அச் செய்தியின்படி. “எனது அலுவலகத்தில்  பல்வேறு பணிகளை எனது உதவியாளர்  ஒருவரே செய்கிறார். இதனால் பல மாதங்கள், ஏன், ஆண்டுகள் தாமதம்…