இராபர்ட்டு கால்டுவெல்  முனைவர் இராபர்ட்டு கால்டுவெல் (Robert Caldwell) அவர்களின் தாயகம்,  காட்டுலாந்து(Scotland). ஜரோப்பாவின் மிகப்பெருந் தீவான அயர்லாந்தில் அவர் பிறந்தார். அந்நாட்டின் கிளாடி(Clady) ஆற்றங்கரையில் அமைந்த பெல்பாட்டு என்ற சிற்றூர் அவரின் சொந்த ஊர்.  சித்திரை 26,  1845 / 1814 ஆம் ஆண்டு மேத் திங்கள் 7 ஆம் நாள் அவர் பிறந்தார். தொடக்கக் கல்வியை அயர்லாந்தில் பயின்ற அவர் தன் பத்தாம் அகவையில்  பெற்றோருடன் காட்டுலாந்துக்குப் போய்விட்டார். பதினோறாம் அகவையில் ஆங்கில இலக்கிய இலக்கணங்களைத் தெளிவுறப் பயின்ற கால்டுவெல், தன்…