தோழர் தியாகு எழுதுகிறார் 34 : படிப்பொலிகள்
(தோழர் தியாகு எழுதுகிறார் 33 தொடர்ச்சி) படிப்பொலிகள் இனிய அன்பர்களே! தாழி மடலில் என்னவெல்லாம் இடம்பெற வேண்டும், எப்படியெல்லாம் இடம் பெற வேண்டும் என்பது குறித்து வேறுபட்ட சில முன்மொழிவுகள் வந்துள்ளன. எல்லாவற்றையும் நான் கருத்தில் கொள்கிறேன். சிலவற்றை உங்கள் பார்வைக்கும் வைக்கிறேன். மதுரையிலிருந்து தோழர் இரவிச்சந்திரன் எழுதுகிறார்: தோழர் தியாகுவுக்கு. தங்களின் ‘தாழி மடல்’ தொடர்ந்து வாசிக்கின்றேன். தோழர்களோடு நாள்தோறும் உரையாடுவதற்கான மிகச்சிறந்த வடிவம் மடல் வரைதல். கைபேசியில் வாசிப்பதற்கும் மிக வசதியாக சுருக்கமாகவும் நிறைவாகவும் இருக்கிறது. தங்களின் தூய தமிழ்ப் பதங்களின்…