குறுந்தொகை கூறும் உயிரியல் செய்திகள் 2/5 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆவணி 08, 2045 / ஆகத்து 24, 2014 இதழின் தொடர்ச்சி) 21. கள்ளி இதன் முள் பிளவு பட்டதாய் இருக்கும். இதன் காய் வெடிக்கும் பொழுது மிகுந்த ஒலி உண்டாகும். ‘கவைமுள் கள்ளிக் காய்விடு கடுநொடி’ வெண்பூதியார்: குறுந்தொகை:174:2 (நொடி – ஒலி) கள்ளிமரத்தின் காய்கள் வெயிலில் வெடிக்கும். ‘பொரிகால் கள்ளி விரிகாய் அம்கவட்டு’ மருத்துவன் சீத்தலைச் சாத்தனார்: குறுந்தொகை: 154:5 22. காஞ்சி காஞ்சி மரம் மெல்லிய கிளைகளை உடையது. பூக்கள் பசிய பூந்தாதுக்கள் உடையனவாய் நறுமணம் கமழும். பயற்றங் கொத்துகள்…
மாமூலனார் பாடல்கள் – 19 : சி.இலக்குவனார்
(சித்திரை 28, 2045 / 11 மே 2014 இதழின் தொடர்ச்சி) ககூ. “நம்மிற்சிறந்தோர் இம்மை யுலகத்து இல்” (பிரிவின்கண் வேறுபட்ட தலைவியும் தோழியும்) – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தலைவி: தோழி! அவர் அன்று கூறிய உரைகள் நினைவில் இருக்கின்றனவா? தோழி: ஆம் அம்ம! ஒரு தடவையல்ல; பல தடவை கூறியதாகக் கூறினீர்களே! அவ்வுரைகள்தாமே! தலைவி: ஆம், “நம்மின் சிறந்தோர் இம்மை உலகத்து இல்” என்பதுதான். தோழி: “நம்மைவிட அன்பில் சிறந்தவர்கள் இந்த உலகத்தில் இல்லை” என்று அவர்…