சங்கத்தமிழ் சொற்பேழை பேராசிரியப் பெருமக்களே! ஆய்வு அறிஞர்களே! மாணவக் கண்மணிகளே! அரிய படைப்பாகிய ’ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பாய்வு’ என்னும் அறிய நூலிற்கு பிறகு http://drkamatchi.in/ (SANGAM CORPUS AND CONCORDANCE) என்னும் வலைத்தளம் தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியல், கணினி மொழியியல் ஆகியவற்றில் ஆர்வம் உள்ள ஆர்வலர்களுக்காகப் புதியதோர் கோணத்தில் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வலைத்தளம் பற்றி: இவ்வலைத்தளத்தில் எட்டுத்தொகை இலக்கியங்களில் குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்றவற்றையும் திருக்குறள், இன்னாநாற்பது, இனியவை நாற்பது போன்ற நூல்களுக்குத் தமிழ் அகரவரிசைப்படி அகராதியும் ஆங்கில அகர வரிசையில் அகராதியும் கொடுக்கப்பட்டுள்ளது….