இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 06 – சி.இலக்குவனார்
[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 05 தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 06 தொல்காப்பியர் காலத் தமிழ்நாடு சேரர் சோழர் பாண்டியர் எனும் முக்குலத்தினரால் ஆளப்பட்டு அம் மூவர் பெயரால் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என அழைக்கப்பட்டு வந்துள்ளது. கொங்குநாடு என்ற பிரிவோ தொண்டை மண்டிலம் என்ற நாடோ அன்று தோன்றிலது. வடவேங்கடத்திற்குத் தெற்கே கன்னட நாடும் துளு நாடும் தோன்றில. பிற்காலத்தில் மலையாள நாடு என்று அழைக்கப்பட்டது, அன்று சேரநாடு எனும் பெயரோடு…