ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3   ஒரே பொருளைச் சுட்டும் பல்வேறு சொற்களும்  பல்வேறு பொருள்களை உணர்த்தும் ஒரே சொல்லும் உள்ள நிலைமை அனைத்து மொழிகளிலும் காணப்பெறும் இயல்புதான்.  இந்நிலைமையைத் தமிழிலும் மிகுதியாய்க்; காண்கிறோம். இடத்திற்குத் தகுந்தாற்போல் பொருளை உணரும் நிலை வெளிப்படையாய் இருப்பின் குறையொன்றும்  இல்லைதான். ஆனால், அதே நேரத்தில் பொருளை உணரும் இடர்ப்பாடு இருப்பின் சொற்களஞ்சியத்தை வளப்படுத்த வேண்டியது இன்றியமையாதது அல்லவா?   ஒரு சொல்-பல்பொருள் என்ற நிலைமை கலைச்சொற்களைப் பொருத்தவரை தவிர்க்கப்பட்டாக  வேண்டும். கலைச்சொற்கள் குழப்பமின்றித்…