சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : காட்சி 6
(சித்திரை 27, 2046 / மே 10, 2015 தொடர்ச்சி) காட்சி ஆறு முடிவை நோக்கிச் சீதை இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு. நேரம்: மாலை வேளை பங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதை, இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், இலவா, குசா, துறவகச் சீடர்கள். மலை மேட்டுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அசுவமேத யாகத்தின் வெள்ளைக் குதிரை கட்டப்பட்டுள்ளது. (இராமன் மரத்தில் கட்டுண்ட குதிரையை அவிழ்க்கச் சென்றபோது, இலவா, குசா இருவரும் குதித்தோடிச்…