இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 2 – மறைமலை இலக்குவனார்
(அகரமுதல 19.07.15 தொடர்ச்சி) 2 தொல்காப்பியர்காலத்தமிழுக்கும் திருவள்ளுவர்காலத்தமிழுக்கும் இடையே நிலவிய சில வேற்றுமைகளைப் பட்டியலிடுகிறார் (மே.ப. ப.139-140). ‘அடிப்படையில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டிலது. விகுதிகள், உருபுகள், இடைநிலைகள், சொற்கள் புதியனவாகத் தோன்றியுள்ளன. பழையன புதிய பொருள்கள் பெற்றுள்ளன’ என்று இவற்றைச் சுருக்கமாகத் தொகுத்துரைத்து, இவ்விருவர் கால இடைவேளை ஆறு நூற்றாண்டுகள் என்பதையும் சுட்டி ‘ஆறு நூற்றாண்டுகட்குள் மேலைநாட்டு மொழிகளில் பல அடைந்துள்ள மாற்றங்களோடு தமிழ்மொழி அடைந்துள்ள மாற்றங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ்மொழி மாற்றமே அடையவில்லை என்று கூறிவிடலாம்’ (மே.ப. ப.139-140) என அறுதியிட்டுரைக்கிறார்….