(புரட்டாசி 12, 2045 / 28 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) 15.சீனாவில் “ஊடகங்கள்”   சாலையோரம் சில இடங்களில் இதழ்களும், நாளேடுகளும் விற்பனை ஆகிக்கொண்டிருந்ததைப் பார்த்தென். ஊடகச்சுதந்திரம் இல்லாதநாடு சீனா என்கிறார்களே, இங்கு எப்படி ஊடகஇதழ்கள் விற்கின்றன என வியப்போடு பார்த்தேன். நான் பார்த்தவகையில், அவற்றுள் பெரும்பாலானவை திரைப்படம், நவநாகரிகச் சீனப்பெண்களின் உடைகள் குறித்துப் பேசும் புதுப்பாணி வடிவமைப்புகள், கடைவணிகம், செய்திகள் என பரவிக்கிடந்தன. அரசியல் பற்றி பேச, அரசின் ஏடு மட்டுமே! அதிலும் சில விதிவிலக்குகள் உண்டென்றால், அது அரசு…