கலைச்சொல் தெளிவோம்! 4.] தோலும் அதளும் : இலக்குவனார் திருவள்ளுவன்
தோலும் அதளும் – (skin and leather) தொல்லியல், பொறிநுட்பவியல், கால்நடையியல் ஆகியவற்றில் leather-தோல் எனப்படுகின்றது; மனையியலில் பதனிட்ட தோல் எனப்படுகிறது. வேளாணியல், தொல்லியல், மருத்துவயியல், கால்நடையியல் ஆகியவற்றில் skin-தோல் எனப்படுகின்றது. இவற்றை வேறுபடுத்திக் கூற வேண்டும். அதளன்(1) (அகநானூறு 274.6) அதளோன் றுஞ்சுங் காப்பின் (பெரும்பாண் ஆற்றுப்படை 151) அதட்பள்ளி- தோற்படுக்கை இலைவேய் குரம்பை உழைஅதள் பள்ளி – மதுரைக் காஞ்சி 310 மெய்உரித்து இயற்றிய மிதிஅதள் பள்ளித் – மலைபடுகடாம் 419 ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கிப் –…