அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்
அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டா! “தேர்தல் முடிவு வந்ததும் மத்தியில் ஆட்சி மாறும். அடுத்த நொடி இங்கே அதிமுக ஆட்சி கலைக்கப்படும்” எனத் தி.மு.க.தலைவர் தாலின் கூறி வருகிறார். மக்களாட்சிக்கு எதிரான கருத்தை அவர் வெளிப்படுத்தத் தேவையில்லையே! தி.மு.க. கூட்டணியினரும் ஆதரவாளர்களும் எதிர்பார்ப்பதுபோல் இடைத் தேர்தல்களில் தேவையான தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றால் இயல்பாகவே இந்த ஆட்சி போய்த்தான் ஆகும். அவ்வாறிருக்க ஆட்சியைக் கலைக்க வேண்டிய தேவை என்ன? பன்னீர் அணியினர் பதினொருவர் மீதான கட்சிமாறி வாக்களிப்பு வழக்கிலும் தீர்ப்பு வந்து அவர்கள் பதவி…
திமுக தோல்வியுறும் என்பது தாலினே அறிந்ததுதான்! – இலக்குவனார் திருவள்ளுவன்
திமுக தோல்வியுறும் என்பது தாலினே அறிந்ததுதான்! கடந்த 13 ஆண்டுகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இப்பொழுது முதன் முறையாக ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஆளுங்கட்சியுடன் சேர்ந்து முதன்மை எதிர்க்கட்சியான திமுகவும் தோற்கடிக்கப்பட்டு விட்டது. இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தலில் திமுக தோற்றதன் காரணம் தாலின் என்பதுபோலும் திமுக தொண்டர்கள் விலைக்குப் போனதும்தான் எனவும் எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றன. உண்மையில் முற்றிலும் தவறான செய்திகளாகும் இவை. தினகரன், தி.மு.க. கூட்டணி என அதிமுக கூறுவது தன் தோல்வியை மறைக்கத்தான். எதிர்க்கட்சி கூட்டணி வைத்தால் தோல்வியுறும் என்றால் அதிமுக வலிமையாக…
தி.மு.க.வின் இந்திப்பாசம் தவறு! தமிழுக்குத் தேவை முன்னுரிமையல்ல! முழு உரிமையே! – இலக்குவனார் திருவள்ளுவன்
தி.மு.க.வின் இந்திப்பாசம் தவறு! தமிழுக்குத் தேவை முன்னுரிமையல்ல! முழு உரிமையே! இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தி.மு.க.வின் பங்களிப்பையோ, உணர்ச்சியூட்டி வழி நடத்திய பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி முதலான தலைவர்கள், தொண்டர்கள் பங்களிப்பையோ யாரும் குறைக்கவோ மறைக்கவோ முடியாது. எனினும் ஆட்சி இருக்கையில் அமர்ந்த பின்னர் எதிர்ப்புகளைச் சமாளிக்க விட்டுக்கொடுக்கும் போக்கில் கலைஞர் கருணாநிதி மாறியது தமிழுக்கும் தமிழ்நாட்டவர்க்கும் தீங்காய் அமைந்தது. இந்தி எதிர்ப்பு என்று சொன்னவுடன் எதிர்த்தரப்பார் என்ன சொல்கின்றார்கள்? “இந்தி தெரிந்ததால் மாறனை அமைச்சராக்கினேன்! இந்தி அறிந்ததால் தயாநிதி மாறனை…
முதிர்ச்சியைக் காட்டிய தாலின் தடம் புரண்டதேன்? கனவு கலைந்ததாலா? – இலக்குவனார் திருவள்ளுவன்
முதிர்ச்சியைக் காட்டிய தாலின் தடம் புரண்டதேன்? கனவு கலைந்ததாலா? அதிமுகவில் பன்னீர் அணி உருவானதால், சசிகலாவிற்கான எதிர்ப்பு அலை கூடியது; அதிமுக ஆட்சிகவிழும்; தாலின் முதல்வராவார் என்ற பேச்சு உலவியது. ஆனால் திமுக செயல் தலைவர் தாலின் அதிமுக இயல்பாகக் கவிழ வேண்டும்; திமுகவின் முயற்சியால் கவிழ்ந்தால் மக்களின் நல்லெண்ணம் திமுகவிற்குக் கிட்டாது எனச்சொல்லி எந்தப் பிரிவிற்கும் சார்பாக இராமல் நடுநிலையாக இருந்தார். பன்னீர் செல்வம் ஆட்சி கவிழும் நிலை வரும், அப்பொழுது திமுக துணைநிற்கும் என்பதுபோன்ற பேச்சுகள் வந்தாலும்…
தலைவர் கருணாநிதியும் இளைய தலைவர் தாலினும் – இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர் கருணாநிதியும் இளைய தலைவர் தாலினும் பொருளாளர் என்ற பொறுப்பில் இருந்து தலைவர்போல் செயல்பட்டு வருகிறார் தாலின். இருப்பினும் அவர் தலைவராகவே ஆக வேண்டும் என்று அவரது அன்பர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அழகிரி போன்ற குடும்ப உறுப்பினர்களும் மூத்த தலைவர்களும் கலைஞர் கருணாநிதி இருக்கும் வரையில் தலைவர் அவர்தான் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான காரணம், இளைஞர் அணி என்பதை, மகளிர் அணி, வழக்குரைஞர் அணி முதலான பிற 17 அணிகள்போல் கருதாமல் தனிக்கட்சிபோல் நடத்தியமைதான். அரசர்வீட்டுக் கன்றுக்குட்டியாகத் தாலின்…
தி.மு.க.வின்மீதான கசப்பு குறையவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்
திமுகவின்மீதான கசப்பு குறையவில்லை! மிகுதியான மன்பதை நலன் திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்திய முதல்வர்களில் முதலாமவர் என்றால் கலைஞர் கருணாநிதிதான் இடம் பிடிப்பார். கடந்த தலைமுறையைச் சேர்ந்த தலைவர் எவரேனும் தமிழ்ப்பற்றுடன் எந்தக் கட்சியிலேனும் இருந்தார் எனில் அவர் கலைஞர் கருணாநிதியின் பேச்சாலோ எழுத்தாலோ கவரப்பட்டிருப்பார். கட்டியணைக்க வேண்டிய நேரத்தில் கட்டியணைத்தும் அணைத்து வெட்டிவிட வேண்டிய நேரத்தில் வெட்டியணைத்தும்(அழித்தும்)விடும் வல்லமையும் அவருக்கு மிகுதியாகவே உண்டு. உலக அளவில் மிகுதியான படைப்புகளை வழங்கியுள்ள முதல் அரசியல் தலைவரும் அவர்தான். என்றாலும் மக்கள்திலகம் ம.கோ.இரா எனப்படும் எம்ஞ்சியார் உருவாக்கிய…