உறுதி   ஏற்பாய் ! அன்னையினை   இழிவுசெய்யும்   தமிழா !   வீட்டில்             அருந்தமிழைக்   கொலைசெய்யும்   தமிழா !   நாட்டில் உன்மொழியை   ஏளனமாய்ப்   பேசிப்   பேசி             உயர்மொழியைத்    தாழ்வுசெய்து    கீழ்மை   யானாய் முன்னோர்கள்   வழிவழியாய்ப்   பேணிக்   காத்த             முத்தமிழில்   பிறமொழியின்   மாசைச்   சேர்த்து விண்வெளியில்   ஓசோனைக்   கெடுத்த   தைப்போல்             விளைவித்தாய்   ஊறுதனைத்   தூய்மை   நீக்கி ! வீட்டிற்குள்    புதையலினை   வைத்துக்   கொண்டு             வீதியிலே   எச்சிலிலை    பொறுக்கு   கின்றாய் காட்டிற்கே   எரித்தநிலா   போன்று   சங்கக்             கவின்நூல்கள்   வீணாகக்    கிடக்கு   திங்கே…