தோழர் தியாகு எழுதுகிறார் 122 : குசராத்து இசுலாமியர் இனக்கொலை 2002
(தோழர் தியாகு எழுதுகிறார் 121 : இரு தேசங்கள் ஒரு தேர்தல் 2/2 தொடர்ச்சி) குசராத்து இசுலாமியர் இனக்கொலை 2002: வேண்டும் தற்சார்பான பன்னாட்டு வினவல் பி.ஒ.நி. / பிபிசி “இந்தியா: மோதி வினா” என்ற ஆவணப்படத்தை இரு பாகங்களாக வெளியிட்டுள்ளது. நெருக்கடிநிலைக்காலச் சட்டம் ஒன்றைப் பயன்படுத்தி மோதி அரசு இந்தப் படத்தை சுட்டுரை(‘டுவிட்டர்’), வலையொளி (‘யூட்யூப்’) போன்ற குமுக ஊடகங்களில் வெளியிட விடாமல் தடுத்துள்ளது. சவகர்லால் நேரு பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் போன்ற கல்வி வளாகங்களில் இப்படத்தைத் திரையிட விடாமல் மாணவர்களைத் தடுத்துள்ளனர். அதே போது…