சங்கத்தமிழ் என்று பெயர் சூட்டலாம்! தமிழ்நாட்டில் ஓடும் வண்டிக்கு எதற்குச் சமக்கிருதப்பெயர்? தமிழ் அறிஞர் எதிர்ப்பு   சென்னை, ஏப்,6- தமிழ்நாட்டில் ஓடும் தொடரிக்கு(இரயிலுக்கு)ச்சமக்கிருதப் பெயர் வைப்பது ஏன் என்று இலக்குவனார் திருவள்ளுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:-   அண்மையில், சென்னைக்கும் மதுரைக்கும் இடையில் மிகுவிரைவுத் தொடரியை இயக்கியுள்ளனர். தமிழ்நாட்டில் ஓடும் இந்த வண்டியின் பெயரில் தமிழ் இல்லை. அதன் பெயர் ‘சென்னை -மதுரை தேசசு சிறப்பு இரயில்’ என்பதாகும்.  பொதுவாகத் தமிழார்வம் மிக்கத் தொடர் வண்டித்துறை அதிகாரிகள் பொறுப்பில்…