செஞ்சீனா சென்றுவந்தேன் 13 –பொறி.க.அருணபாரதி
(ஆவணி 22, 2045 / செப்.07, 2014 இதழின் தொடர்ச்சி) 13. சியான் நகரத்துச் சுடுமண் வீரர்கள் சியான் நகரின் முதன்மைக் கடைகளிலும், உணவகங்களிலும் வாயிலில் ஒரு சுடுமண்படிம(terracotta or Terra-cotta) வீரர் நிற்பதை நாம் இன்றைக்கும் காண முடியும். சியான் நகருக்குப் பெருமை சேர்க்கும் ஓர் இன்றியமையாத இடம் சுடுமண்படிம வீரர்கள் அமைந்துள்ள பகுதிதான். ஐ.நா.வின் கல்விஅறிவியல்-பண்பாட்டு(UNESCO) அமைப்பு, இவ்விடத்தை 8ஆம் உலக விந்தை என அறிவித்துள்ளது என்பதால், உலகெங்கிலுமிருந்து பார்வையாளர்கள் அங்கு வருகிறார்கள். அப்படி என்ன விந்தைம் இங்கு இருக்கிறதென்று கேட்கிறீர்களா?…