அழுகிப்போன இலங்கைக்குப் புனுகுபூசும் இராம்! – புகழேந்தி தங்கராசு

அழுகிப்போன இலங்கைக்குப் புனுகுபூசும் இராம்!/  ‘இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பன்னாட்டுப் பங்களிப்புடன் கூடிய நடுநிலையான  உசாவல் நடத்தப்பட வேண்டும்’ –  என்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசின்  இசைவுடனேயே, ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்றுவரை, அப்படி ஓர் உசாவல் நடக்கக்கூடும் என்பதற்கான அறிகுறி கூட இல்லை.   சிங்களப் படையினரின் கொலைவெறியும் காமவெறியும் தொடர்ந்து அம்பலமாகிவந்த நிலையில்,  பன்னாட்டு அளவில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஏற்பட்ட நெருக்கடியை நீர்த்துப்போக வைப்பதற்காகவே, அந்தத் தீர்மானத்தைத்…

கல்வியாற்றுரைக் கருத்தரங்கு – இந்து

‘தி இந்து’ – மாதா பொறியியல் கல்லூரி நடத்தும் வழிகாட்டல் நிகழ்ச்சி வைகாசி 10 / மே 24  நடைபெறுகிறது   + 2 முடித்து விட்டு அடுத்த என்ன படிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களைப் போன்றவர்களுக்காகவே இந்து இதழ் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது. மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எந்த படிப்பை எப்படித் தேர்ந்தெடுக்கலாம், எந்த படிப்புக்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன? மாணவர்களின் வெற்றியை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி மாணவர்களுடனும், பெற்றோர்களுடனும்…