இதற்குத்தானா தாழ்ச்சி செய்தீர் ஆளுநரே! – இலக்குவனார் திருவள்ளுவன்

இதற்குத்தானா தாழ்ச்சி செய்தீர் ஆளுநரே!   தமிழ்நாட்டரசின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தை 23, 2048 / பிப்பிரவரி 5, 2017 அன்று தன் முதல்வர் பதவியைவிட்டு விலகி மடல் அளித்துள்ளார். அன்றே அ.தி.மு.க. சட்டமன்றக்கட்சியின் தலைவராக வி.கி.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அன்றைய நாளில் தமிழ்நாட்டில்தான் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் இருந்துள்ளார். ஆனால், உடனே தில்லி பறந்துவிட்டார். மத்திய அதிகாரமையத்தால் மிரட்டப்பட்ட பன்னீர்செல்வம் கட்சியில் தான் மிரட்டப்பட்டதால் பதவி விலகியதாக அறிவித்தார். இதனால் தமிழ்நாடு குழப்பத்தைச் சந்தித்துள்ளது.   பெரிய மாநிலமான தமிழ்நாட்டிற்கு முழுமையான ஆளுநரை…

இணக்கமாகுங்கள் அல்லது தி.மு.க.விற்கு வழிவிடுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இணக்கமாகுங்கள் அல்லது தி.மு.க.விற்கு வழிவிடுங்கள்!   அ.தி.மு.க.வின் குழப்பங்களுக்குக் காரணம் பா.ச.க.தான். சேகர்(ரெட்டி) வழக்கு முதலானவை மூலம், ஒதுங்க நினைக்கும் பன்னீர்செல்வத்தையும் மிரட்டிப் பொங்க வைத்துள்ளது. கரூர் அன்புநாதன்வழக்கு முதலானவை மூலம் நத்தம் விசுவநாதன் போன்றவர்களைப் பன்னீர்ப்பக்கம் நிற்க வைக்கிறது. பன்னீரைக் காட்டிச் சசிகலாவை மிரட்டிப் பணிய வைக்க முயல்கிறது. எனவேதான், பெரும்பான்மையரைச் சசிகலாவிற்கு எதிராக அறிக்கைகள் விடச்செய்தும் சிலரைச் சசிகலாபக்கம் நிற்க வைத்தும் நாடகமாடுகிறது பா.ச.க.   இப்போதைய சூழலில் சசிசலா பக்கம் பா.ச.க. சாய்ந்தால் பன்னீர் அரசியலில் ஒதுக்கப்படுவார். மாறாக அக்கட்சி…

குழப்பங்களுக்குக் காரணம் ஆளுநரை இயக்குபவர்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

குழப்பங்களுக்குக் காரணம் ஆளுநரை இயக்குபவர்களே!     தமிழக முதல்வர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியதும் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்ட மன்றக் கட்சித்தலைவராக வி.கி.சசிகலா என்னும் சசிகலா நடராசனைத் தேர்ந்தெடுத்ததும் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் தமிழ்நாடு விரைந்து வந்திருக்க வேண்டும். இது தொடர்பில் அவர் மத்திய அரசின் உரியவர்களைக் கலந்தாய்வதும் சட்ட வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்பதும் முறையானதே! ஆனால், அதை ஒளிவுமறைவாகச் செய்ய வேண்டிய தேவையில்லை. வெளிப்படையாக அறிவித்துவிட்டுத் தமிழ்நாட்டிற்கு வரும் நாளையும் தெரிவிக்கலாம். காலத்தாழ்ச்சி செய்யாமல், ஆளுங்கட்சியின் ச.ம.உறுப்பினர்களின் முடிவை ஏற்றிருந்தால்,…