இலக்குவனாரின் ஆங்கிலத் தொல்காப்பியத்திற்கு அண்ணாவின் அணிந்துரை

தொல்காப்பிய மொழிபெயர்ப்பு: தமிழ்ப்பெருமக்களுக்குப் பெருமை நல்கும் பெருஞ்செயல் பேராசிரியர் சி.இலக்குவனாரின் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பிற்குப் பேரறிஞர் அண்ணா அணிந்துரை                   இன்றமிழ்ப் புலமைமிகு இலக்குவனாரின் இவ் வாராய்ச்சி நூலை நோக்கியவுடனே விழுமம் எனும் எழிற்றமிழ்ச் சொல்லே எவருடைய உள்ளத்திலும் இயல்பாக எழும். வினைநயங் கெழுமிய இவ்வாராய்ச்சி வியப்பூட்டுகின்ற ஓர் இலக்கியக் கருவூலம் எனினும் மிகையன்று. பன்னூற் புலமையுடைய பண்டாரகர் இலக்குவனார்க்கு இஃதோர் எளிய வெற்றியேயாம்.                   இஃது அறப்பழமையும், அழியா அழகும் நனி உயர்வும் பொலியும் நற்றமிழ் இலக்கணப் பேழையாகிய ஒல்காப்…

நானில மக்களை நால்வருண மக்களாகக் காட்டினர்

  “மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே” என்னும் நூற்பா 22இல் உள்ள நால்வர் என்னும் சொல் நான்கு திணைகளில் வாழ்பவரை குறிப்பதாகும். ஆனால் இது நான்கு வருணமக்களைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இதே போல் மேலோர் என்பது, முதல் இரு வருணத்தை சேர்ந்த இருபிறப்பாளர்கள் எனத் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. உண்மையிலேயே இந்த சொல் வல்லமை மிக்கவர்களையே குறிக்கிறது. – பேராசிரியர் சி.இலக்குவனார்: தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும் (Tholkāppiyam in English with critical studies) தமிழாக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்

சாதிமுறையைத் தூக்கிப் பிடித்தவர்களால் ஏற்பட்ட இடைச்செருகல்கள்

  சாதிமுறையைத் தூக்கிப் பிடித்தவர்களால் ஏற்பட்ட இடைச்செருகல்கள்   மிகப்பழங்கால நூல்களில் இடைச்செருகல்கள் ஏற்படுவது மிக இயல்பான ஒன்றாகும். கி.மு.7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியத்திலும் இவ்வாறே ஏற்பட்டுள்ளது. குறும்புக்காரர்களின் கைகள் இதனைத் தொடாமல் விட்டு வைக்கவில்லை. எழுத்து அதிகாரமும் சொல் அதிகாரமும் தொகுப்பாக அமைந்து ஒவ்வொரு இயலின் பொருண்மையும் நிரல் பட அமைந்து நூற்பாக்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து விளங்குகிறது. இவ்விரண்டும் மொழி குறித்த ஆய்வாகும். இடைச்செருகல் ஏற்பட்ட இடைக்காலத்தில் மொழிக் கல்வியில் யாருக்கும் நாட்டம் இல்லை என்பது தோன்றுகிறது.   ஆனால் பொருள்…

தொல்காப்பியர் கால ஆண்டுத் தொடக்கம் ஆவணி – சி.இலக்குவனார்

தொல்காப்பியர் கால ஆண்டுத் தொடக்கம் ஆவணி பல்வேறு நிலைகளிலே காதலைத் துய்த்து மகிழ்வதற்கு, தக்க பருவங்களையும், நேரங்களையும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். காதலில் முல்லை முதன்மைப் பங்கு வகிக்கிறது. எனவே முல்லைப் பருவத்தையும் நேரத்தையும் குறிப்பிடும் பொழுது முதலில் அவர் கார்காலத்தைக் குறிப்பிடுகிறார். எனவே அறிஞர்கள் சிலர் தொல்காப்பியர் காலத்தில் ஆண்டுத் தொடக்கம் கார் பருவத்தின் முதல் திங்களாகிய ஆவணி எனக் கருதுகின்றனர். கேரளாவில் இன்றைய நாளிலும் ஆவணியை முதலாகக் கொண்ட ஆண்டினை கணக்கிட்டு வருவது நடைமுறையில் இருப்பதை இதற்குச் சார்பாகக் கூறுவர் (நூற்பா. 6,…