காதல் வாழ்விற்கு முதன்மை தந்த பழந்தமிழ் மக்கள் – சி.இலக்குவனார்
காதல் வாழ்விற்கு முதன்மை தந்த பழந்தமிழ் மக்கள் தமிழ் இலக்கியப் படைப்புகள் அகம், புறம் என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ள மரபைக் கொண்டுள்ளன. அகம்பற்றிய படைப்புகள் தலைவன் தலைவியின் உளவியல் செயல்பாடுகள் குறித்து அதிகம் வலியுறுத்துகின்றன. அவை பெரும்பான்மையும் உளவியல் ஆர்வம் கொண்டுள்ளன. உணர்வுகள் மேலோங்கி இருக்கக்கூடிய ஒடிசி போன்று அவை ஆழமாகத் தனிநிலையாக விளங்குவன. பொதுவாக அகம் காதல் குறித்தும், புறம் இவற்றின் புறநிலைச் செயல்பாடுகள் குறித்தும் கையாளுவதாகச் சொல்லப்படுகிறது . . . . . . . . ….
நானில மக்களை நால்வருண மக்களாகக் காட்டினர்
“மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே” என்னும் நூற்பா 22இல் உள்ள நால்வர் என்னும் சொல் நான்கு திணைகளில் வாழ்பவரை குறிப்பதாகும். ஆனால் இது நான்கு வருணமக்களைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இதே போல் மேலோர் என்பது, முதல் இரு வருணத்தை சேர்ந்த இருபிறப்பாளர்கள் எனத் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. உண்மையிலேயே இந்த சொல் வல்லமை மிக்கவர்களையே குறிக்கிறது. – பேராசிரியர் சி.இலக்குவனார்: தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும் (Tholkāppiyam in English with critical studies) தமிழாக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்க் கடவுள் வணக்க வழிபாட்டை ஆரியத் தொடர்பால் ஏற்பட்டதாகத் திரித்துக் கூறினர் – சி.இலக்குவனார்
திணையைக் குறிப்பிடும் பொழுது அத்திணைக்குரிய இயற்கை வளத்தையோ உற்பத்தியான விளைபொருளையோ குறிப்பிடுவது வழக்கமாகும்; என்ற போதும் தொல்காப்பியர் பல்வேறு திணைகளுக்குரிய முதன்மையான தெய்வங்களையும் அவற்றின் முதன்மையையும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு புலவர் தெய்வத்தன்மை முதன்மையையும் மக்களுக்குரிய இன்றியமையாமையையும் குறிப்பிட்டுள்ளார். மாயோன், சேயோன், வேந்தன், வருணன் எனக் கடவுளர்களை குறிப்பிடுவது, சிலரால் அவர்கள்தான் ஆரியர்களால் வழங்கப்பட்ட விட்ணு, முருகன், இந்திரன், வருணன் என்ற முடிவுக்கும் மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கடவுள் வணக்க வழிபாடுகள் ஆரியர்களுடனான தொடர்பால் ஏற்பட்டது என்ற முடிவுக்கும் கொண்டு வந்துவிட்டது. –…
இழிவினை ஏற்படுத்தும் இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார்
சில நேரங்களில் இடைச்செருகல் மூலநூலின் பெருமையை மிகுவிக்கும். ஆனால் இங்கோ தொல்காப்பியத்தின் தொன்மையைக் குறைத்தும், தமிழருக்கு இழிவுபடுத்தியும் அமைந்துள்ளன. இவ்விடைச்செருகல்களால்தான் தொல்காப்பியத்தின் காலம் கி.பி.5ஆம் நூற்றாண்டு எனப் பிற்பட்டக் காலத்திற்குக் கொண்டு வரப்பட்டு தமிழர் பண்பாடும் நாகரிகமும் ஆரியப் பண்பாட்டிலிருந்தும் நாகரிகத்திலிருந்தும் உருவானதாகத் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றன. – பேராசிரியர் சி.இலக்குவனார் : தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும் (Tholkāppiyam in English with critical studies): பக்கம்21 தமிழாக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்
எண்ணெய் கலந்த நீர் போன்ற இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார்
எண்ணெய் கலந்த நீர் போன்ற இடைச்செருகல்கள் தொல்காப்பியத்தின் கட்டமைப்பு நன்கு பின்னப்பட்ட கவின்கலை கூறுமிக்கத்தாக அமைந்துள்ளமையால் இவற்றின் கட்டமைப்பு அழகைச் சிதைக்காமல் மூலநூலில் எதையும் சேர்ப்பது என்பது உள்ளபடியே அரிதான செயலாகும். எனவே இக்கேள்விக்குரிய நூற்பாக்கள் தம்முடைய உண்மையான நிறத்திலேயே தோன்றுகின்றன. இவை எண்ணெயில் கலந்த நீராகத் தனித்து விளங்குகின்றன. – பேராசிரியர் சி.இலக்குவனார் தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்: (Tholkāppiyam in English with critical studies) பக்கம்20 தமிழாக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்
தொல்காப்பியம் விழுமிய நூல் – மு.வை.அரவிந்தன்
தொல்காப்பியம் விழுமிய நூல் தொல்காப்பியம் என்னும் பழம்பெரும் இலக்கணநூல் தமிழ்மொழியின் தொன்மைக்கும் சிறப்பிற்கும் சான்றாய் விளங்குகின்றது. வளமாக வாழ்ந்த தமிழினத்தின் உயர்ந்த கொள்கைகளையும் எண்ணங்களையும் உலகிற்கு உணர்த்தும் விழுமிய நூலாய் இது ஒளிர்கின்றது. இதனை இயற்றிய தொல்காப்பியரின் குரல், காலத்தையும் இடத்தையும் கடந்து வந்து தெளிவாக ஒலிக்கின்றது. தொல்காப்பியம் தனக்குப் பின் தோன்றிய பல இலக்கண இலக்கியங்களுக்கு எல்லாம் தலைமை தாங்கி வழிகாட்டி நடத்திச் செல்லுகின்றது. தொல்காப்பியத்தின் கருத்தை உணரவும் உணர்த்தவும் புலவர் பெருமக்கள் காலந்தோறும் முயன்று வந்தனர். அம்முயற்சியின் விளைவாய் உரைகள்…