61. பெயர்வுக் காலம்-transit period   பெயர்வு ஊர்வயின் பெயரும்பொழுதில் (அகநானூறு : 64.13) எக்கண்டு பெயரும்காலை (அகநானூறு : 318.11) அகலாங்கண் அளை மாறி, அலமந்து, பெயருங்கால் (கலித்தொகை :108.5) பெறாஅன் பெயரினும் முனியல் உறாஅன் (குறிஞ்சிப்பாட்டு : 243) பந்தொடு பெயரும் பரிவில்லாட்டி (நற்றிணை :140.7) ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது (புறநானூறு : 253.1)   இடப் பெயர்வு சங்க இலக்கியங்களில், பெயரும்பொழுது (1), பெயரும்காலை (1), பெயருங்கால் (1), பெயரின்(6), பெயரும் (38), எனவும் எதிர்மறையில் பெயராது (3)…