இயல்பான கணிணி மொழி பெயர்ப்பிற்குச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் இணையமாநாடு 2015, சிங்கப்பூர் இயல்பான கணிணி மொழி பெயர்ப்பிற்குச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com முன்னுரை: உலகின் முதல் குடியாகிய தமிழ்க்குடி தோன்றிய பின்னர், இயற்கைச் சீற்றங்களால், கடல் கோள்களால், நிலத் திட்டு நகர்வுகளால் மக்களினம் பிரியும் சூழல் ஏற்பட்டது. அங்கங்கே பிரிந்து சென்றவர்கள் தாய்க்குடியுடன் தொடர்பின்றி அங்கங்குள்ள சூழலுக்கேற்பப் பேசி புதிய மொழிகள் பிறந்தன. பல மொழிகள் பிறந்ததும், வெவ்வேறு மொழி பேசுவோரிடையே தொடர்பு ஏற்பட்டதும் மொழிபெயர்ப்பும் உருவானது. தமிழில் கிடைத்துள்ள மூவாயிரம் ஆண்டிற்கு…