பிறமொழிச் சொற்களும் தமிழாக்கமும் தேடித்தேடி அறிந்து தமிழ்ச்சொற்களையே ஆள வேண்டும்!   கண்ணால் பார்க்கலாம், கண்ணாடி தேவை எனில் அதன் வழி பார்க்கலாம். நல்ல மாம்பழம் இருக்க மாங்காயைத் தேடலாமோ? வேர்ச் சொற்கள் புதைந்து பொலிந்து கிடப்பது தமிழ்ச் சொற் களஞ்சியம்.  ஆயினும் காலத்துக்குக் காலம் பிறமொழிச் சொற்களின் (பாளி, பிராகிருதம், வடமொழி) ஒலிபெயர்ப்பைத் தமிழ்ச் சொற்களாக்கும் முயற்சி தொடர்ந்துள்ளது. தொல்காப்பியர் கோட்டிட்டுக் காட்ட, நன்னூலார் சிறிதே விளக்க, வீரசோழியத்தார் ஒலிபெயர்ப்புக்குத் தற்பவம், தற்சமம் என்ற வழிகாட்டலை விட்டுச் சென்றார்.   தற்பவம் = வடமொழிக்கே…