கலைச்சொல் தெளிவோம் 63 : அடார்-trap
63 : அடார்-trap அடார், அடாஅர் பெருங்கல் லடாரும் (புறநானூறு: 19.6) சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடாஅர் (நற்றிணை :119.2) இங்கே அடார், அடாஅர் என்பன விலங்குகளை அகப்படுத்தும் பொறியைக் குறிக்கின்றன. ஆட்சியியல், வேளாணியல், தொல்லியல், பொறியியல், மீனியல், மனையியல், தகவல் நுட்பவியல், இயற்பியல், கால்நடை மருத்துவ இயல் ஆகியவற்றில் trap-பொறி என்று குறிக்கப் பெற்றுள்ளது; இவற்றுள் சில இயல்களில் கண்ணி அல்லது கண்ணிப் பொறி என்றும் குறிக்கப்பெற்றுள்ளது. பொறி என்பது ஐம்பொறி என்னும் பொழுதும், பொறியியல் என்னும் பொழுதும்…