வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 38(2.08) : பரத்தனை விலக்கல்
[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 37(2.07) தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 38. பரத்தனை விலக்கல் தன்றுணை யலாளைத் தழுவுவோன் பரத்தன். தன்னுடைய மனைவியைத் தவிர மற்ற பெண்களுடன் இன்பம் அநுபவிப்பவன் பரத்தன். பரத்தை யினுமிகக் கொடியவன் பரத்தன் அவன் பரத்தையை விடத் தீயவன். பொதுமக ளாதலம் முழுமக னாலே. அந்த அறிவிலியால் தான் ஒரு பெண் பரத்தை ஆகிறாள். 374.நன்மகன் கெடுதலப் புன்மக னாலே. அந்தத் தீயவனால் நல்லவனும் கெடுவான். 375.மறனெலா நிகழ்வதம் மாபாவி யாலே. அத்தீயவனால் தான் அறத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறுகின்றன….
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 37(2.07) : பரத்தையை விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 36 (2.06) தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 37(2.07) பரத்தையை விலக்கல் பரத்தை யின்பினைப் பலர்க்கும் விற்பவள். பரத்தை உடலின்பத்தைப் பலருக்கும் விற்பவள். மதுசூ திரண்டினும் பொதுமகள் கொடியள். எல்லோருக்கும் சொந்தமாகக் கூடிய அவள் மது, சூது இவ்விரண்டை விடத் தீமை தரக் கூடியவள். 363.அவணடை யுடைநோக் காதியா லழிப்பாள்; அவள் மீது நம் கவனம் சென்றால் நம்மை முற்றிலும் அழிப்பாள். இன்பந் தருதல்போற் றுன்பெலாந் தருவள்; இன்பம் தருவது போல் எல்லாத் துன்பங்களையும் தருவாள். உடைமுதற் பொருளெலா…