செஞ்சீனா சென்றுவந்தேன் 12 –பொறி.க.அருணபாரதி
(ஆவணி 15, 2045 /ஆகத்து 31, 2014 இதழின் தொடர்ச்சி) 12. சியான் நகரின் ஆற்றில் நாகப்புள்(Dragons)! பழங்காலக் கதை ஒன்றுடன் பிணைக்கப்பட்ட கட்டடங்களும், கலைச் சின்னங்களும் அனைத்து நாகரிகங்களிலும் இருக்கின்றன. சிலப்பதிகாரம் – தமிழர்களின் மரபுடன் இணைந்து வழங்கப்பட்ட அவ்வாறான இலக்கியமே! அதுபோலச் சீனாவிலும் பல இடங்கள் சீன இலக்கியங்களின் ஊடாக இன்றைக்கும் மதிக்கப்பட்டு வருகின்றன. சியான் நகரின் மையப் பகுதியில் மணிக்கோபுரம் (Bell Tower) என்றொரு பகுதி உள்ளது. 1384ஆம் ஆண்டு மிங் மன்னராட்சியின் போது, இந்தக்…