விண்தொலைக்காட்சியில் பண்பாடு குறித்துக் கூறுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்

விண்தொலைக்காட்சியில் பண்பாடு குறித்துக் கூறுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன் சித்திரை 1, 2946, ஏப்பிரல் 14, 2015 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி – 12.00 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பாகும் விண் தொலைக்காட்சியின் நீதிக்காக நிகழ்ச்சியில் பண்பாடு குறித்துக் கருத்து தெரிவிக்கின்றேன். மறு ஒளிபரப்பு இரவு 8.00 மணி – 9.00    http://wintvindia.com இணையவரியில் இணையத்திலும் உடன் காணலாம்.  வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

பன்னாட்டு வேட்டி நாள் கருத்தரங்கம் – விண் தொலைக்காட்சி : பங்கேற்கிறேன்

இன்று மார்கழி 22,2045 / திசம்பர் 06, 2014 காலை 11.00 – 12.00 மணி நேரத்தில் வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் ‘நீதிக்காக’ நிகழ்ச்சியில் பன்னாட்டு வேட்டி நாளை முன்னிட்டு நடைபெறும் தமிழ்ப்பண்பாடு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறேன். http://wintvindia.com. மின்வரியில் இணையத்திலும் காணலாம்.   வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன்.   நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

தமிழ்க்கட்டாயக்கல்வி குறித்த வாகை(வின்) தொலைக்காட்சி காணுரை இணைப்பு

தமிழே கல்வி மொழியாக, வாகை (வின்) தொலைக்காட்சியின் கருத்தாக்கப் பணி! தமிழ்நாட்டில் அனைவரும் தமிழ் பயில வேண்டும் என்பதற்காகப் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர், 2006 ஆம் ஆண்டு முதல்வகுப்பிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் அடுத்தடுத்த வகுப்பு என்ற முறையில் தமிழ்மொழிப்பாடம் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்பெற்ற சட்டப்படியான செயல்பாடு இது. இதற்கிணங்க இவ்வாண்டு 9 ஆம் வகுப்பு பயில்பவர்கள் தமிழைப் பயில்வார்கள். அடுத்து 10 ஆம் வகுப்பு பயிலும் பொழுது, இவற்றின் தொடர்ச்சியாகத் தமிழைப் பயில்வார்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதல்…