(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி) இயல் – 3 இருபதாம் நூற்றாண்டுக் கவிதையும் இலக்குவனாரும்   இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் தமிழ்நாடு விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த காலமாகும். நாட்டு விடுதலை வேட்கை மக்கள் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்தது. பாட்டுக்கொரு புலவன் பாரதியும் அவனைப்போலப் பிற கவிஞர்களும் நாட்டு விடுதலையைக் கருப்பொருளாகக் கொண்டு கவிதைகளை இயற்றினார்கள். செய்யுள் என்ற சொல்லைக் கவிதையாக்கியவர் பாரதி. மிகவும் எளிய சொற்களால் உள்ளத்து உணர்வைத் தூண்டும் வகையில் பாடினார். நாட்டு விடுதலையைப் பாடிய…