செஞ்சீனா சென்றுவந்தேன் 3 – – பொறி.க.அருணபாரதி
(ஆனி 15, 2045 / சூன் 29, 2014 இதழின் தொடர்ச்சி) 3. இந்தியப்பணத்தாளில் காந்தி … சீனப் பணத்தாளில் மாவோ! சீனாவுக்குள் நுழைந்தவுடன் சிகப்பு நிறத்தில் மாவோ – இலெனின் படங்கள் என்னை வரவேற்கும் என நினைத்திருந்தேன். ஆனால், நுழைந்தவுடன் சிவப்பு நிறப்பின்னணியுடன் வட அமெரிக்க நிறுவனமான கே.எப்.சி. நிறுவன முதலாளி சாண்டர்சு படத்துடன்கூடிய வணிகச்சின்னம்தான் என்னை வரவேற்றது! ஒரு சில இடங்களில் டெங் சியோ பிங்கின் படங்களைக் கொண்ட பதாகைகளில் சீன எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன. நம்மூரில், எப்படி மகிழுந்துகளின் முன்புற…