கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 86 : தேனருவி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 85 : பொதிகைக் காட்சி-தொடர்ச்சி) பூங்கொடி தேனருவி           வான முகட்டின் வாய்திறந் திறங்குதல்            மானை வீழ்ந்திடும் தேன்சுவை அருவியின்    140           ஓங்குயர் தோற்றமும் ஒய்ய்யெனும் ஓசையும் பாங்கிஎன் எருத்தையும் செவியையும் வருத்தின;   —————————————————————           மல்லல் – வளப்பம், தண்டாது – இடைவிடாது, கங்குல் – இரவு, மான – போல, ஒய்ய்யெனும் – ஒலிக்குறிப்பு, எருத்து – கழுத்து. ++++ வானுற நிவந்த வால்வெண் ணிறத்தூண் தானது என்னத் தயங்கி நின்றிடும்;                  …

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 85 : பொதிகைக் காட்சி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 84 : சண்டிலி வருகை – தொடர்ச்சி) பூங்கொடி பொதிகைக் காட்சி           தென்திசைப் பொதியில் காணிய வந்தேன்;             முடியும் நடுவும் முகிலினம் படர்தரக்     110           கொடிபடர் சந்தனக் கடிமணம் அளாவிச் சில்லெனுந் தென்றல் மெல்லென வீச நல்லிளஞ் சாரல் நயந்திடத் துளிப்ப அலரும் மலரும் அடருங் கடறும்              பலவும் குலவி நிலவும் மாமலைக்           காட்சியும் மாட்சியும், கடும்புனல் அருவியின் வீழ்ச்சியும் கண்டவை வாழ்த்தினென் வாழ்த்தினென் தென்மலைச் சிறப்பினைச் செப்புதல் எளிதோ? கன்மலைக்…