கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6, அன்றே சொன்னார்கள்44, இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3:தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6 நகரங்கள் போல் பெரிதாக அமைந்த மாளிகைகளை நகர் என்றே பழந்தமிழர் குறிப்பிட்டள்ளதைக் கண்டோம். புலவர்கள், நகரங்களைப்பற்றிக் குறிப்பிடும் பொழுதே நகரங்களில் உள்ள கட்டடங்களின் சிறப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர். மாளிகைகள் பற்றிக் குறிப்பிடும் பொழுதே அவற்றின் உயரம், அகலம், காவல், வளமை முதலான சிறப்புகளை உணர்த்த அவர்கள் தவறவில்லை.உயர்ந்த மேல்நிலைகளை உடைய பெரிய மனை நெடுநிலை வியல் நகர் எனச் சொல்லப்பட்டுள்ளது. புலவர் மதுரைச் சுள்ளம்போதனார்,வியல் நகர் (நற்றிணை: 215.4) என அகன்ற மாளிகையைக்குறிப்பிடுகிறார். …
இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 10 : உக்கிர பாண்டியன்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 9 : ஓரியின் புகழ்-தொடர்ச்சி) தமிழர் வீரம் உக்கிர பாண்டியன் வேங்கை மார்பன் மறப்படை வீரன்; படைச் செருக்கால் பாண்டிய மன்னனையும் மதியாது இறுமாந்திருந்தான். அந்நாளில் மதுரையில் அரசு வீற்றிருந்த பாண்டியன் ஒரு பெரு வீரன். சோழ மன்னனும் சேரமானும் அவனுடைய சிறந்த நண்பர்கள். தமிழறிஞர்கள் அவனைச் சுற்றமெனச் சூழ்ந்திருந்தாரக்ள். இவ்விதம் பல்லாற்றானும் புகழ்பெற்று விளங்கிய பாண்டியன் பகைவர்க்கு மிகக் கொடியவன். அவரைக் கண்ணின்றி ஒறுப்பவன்; ஆதலால் உக்கிரப் பெருவழுதி என்று பெயர் பெற்றான். உக்கிரனும் வேங்கையும் வழுதிக்கும்…
புறநானூற்றுச் சிறுகதைகள்: நா. பார்த்தசாரதி: அடிப்படை ஒன்றுதான்
புறநானூற்றுச் சிறுகதைகள் 6. அடிப்படை ஒன்றுதான் “உலகில் அங்கு இங்கு என்னாதபடி எங்கும் பரந்து வாழும் மனித குலத்திற்குள், வாழும் முறையாலும் துறையாலும் வேறுபாடுகள் காண்கிறோம். ஆனால் வாழ்க்கை என்ற ஒன்றின் மூலமான அடிப்படையில் வேறுபாடு இருக்கிறதா? ‘மனித வாழ்க்கை’ என்ற ஒரு பொதுவான தத்துவத்தில் வேறுபாடு இருப்பது பொருந்துமா? இருக்கத்தான் முடியுமா? வாழ்க்கையின் சூத்திரக் கயிறு தொடங்கும் இடத்தையே ஆராய்ந்து பார்க்க விரும்பும் இந்தத் தத்துவரீதியான வினா நக்கீரர் என்ற பெரும் புலவருக்கு எழுந்தது. இன்றைக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த…