121/133 திமுகவில் உதயநிதி தவிர வேறு யாரும் சனாதனம் குறித்துப் பேசவில்லை. அப்படியானால் திமுகவிலேயே இதற்கு ஆதரவு இல்லைதானே!
(சனாதனம் பொய்யும் மெய்யும் 120 தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 121 “சனாதனம் என்றால் 4% மக்களுக்குக் கல்வி கற்க அனுமதி உண்டு. மற்றவர்கள் அடிமையாக வாழ வேண்டும். இதுதான் அதன் தத்துவம். 1835-இல் மெக்காலே பிரபு வரவில்லை என்றால், எல்லாரும் கல்வி கற்கலாம் என்ற சட்டம் வரவில்லை என்றால், நாம் கல்வி கற்றிருக்க மாட்டோம். என்று பேசியுள்ளார். மேலும், 1912-இல் பட்டதாரிகள் 100 பேரில் 94 பேர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். 4% பேர் 94% பட்டம் பெற்றிருந்தார்கள். மீதி 96% பேர்…
