81. சனாதனத்தில் மட்டும்தான் மனிதன் கடவுள் ஆக முடியும். எடுத்துக்காட்டு ஐயா வைகுண்டர்- அண்ணாமலை: இந்தப் புளுகிற்கு என்ன விடை?
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 80 தொடர்ச்சி) சனாதனம் இல்லாத பிற சமயங்களில் தத்தம் மத மூலவரை அவர்கள் சிறந்து வாழ்ந்ததன் அடிப்படையில் கடவுளர்களாக மக்கள் கருதுகிறார்களே! சீர்திருத்தவாதியான ஐயா வைகுண்டரைச் சனாதனி என்பது வரலாற்றுத் திரிபு, கயமைத்தனம். ஒடுக்கப்பட்ட மக்களைச் சாதிக்கொடுமைகளிலிருந்து மீட்க ‘ஐயா வழி’ என்னும் தனிச் சமயத்தை தோற்றுவித்தார் ஐயா வைகுண்டர். அவர் சனாதன வாதியாக இருந்தால் சனாதனத்திற்கு எதிராக தனியொரு சமயத்தைத் தோற்றுவித்திருப்பாரா? சனாதனத்தில் பிராமணர் அல்லாதார்க்கு கடவுளர் பெயரைச் சூட்டுவதற்குத் தடை உள்ளமையால், முடிசூடும் பெருமாள் எனப்…