சனாதனத்தை எதிர்க்கும் கபிலர் – இலக்குவனார் திருவள்ளுவன்

சனாதனத்தை எதிர்க்கும் கபிலர் சனாதனத்தை ஆரியம் காலந்தோறும் வேருன்ற எல்லா முயற்சியும் எடுத்துக் கொண்டுள்ளது. அதே நேரம், தமிழ் உலகம் எந்த அளவில் எல்லாம் எதிர்க்க வேணடுமோ அந்த அளவில் எல்லாம் சனானத்தை எதிர்த்துக் கொண்டே வருகிறது. அவற்றில் ஒன்றுதான் கபிலர், கபிலர் அகவல் மூலம் சனாதனத்திற்கு எதிராகக் குரல் எழுப்பியது. கபிலரின் பாடற் கருத்து ஒன்று வாலியின் மூலமாகத் திரைப்பாடல் ஒன்றின் மூலம் நமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாலி 1958இல் தன்னுடைய முதல் திரைப்பாடலை எழுதினாலும் 1961,63,64ஆம் ஆண்டுகளில் 7 படங்களில் பாடல்களை எழுதியுள்ளார்….

பூணூல் அணிந்திருக்கும் போது, ஒழுக்கக் கேடான செயல்கள் செய்யமாட்டார்கள் என்பது சரியா? –  இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் பொய்யும் மெய்யும்: 17- 19 – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்: 20-21 நால்வகைச் சாதியிந் நாட்டில் நீர் நாட்டினீர் மேல்வகை கீழ்வகை விளங்குவது ஒழுக்கால்  என்றும் குலமும் ஒன்றே குடியும் ஒன்றே இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே என்றும் கபிலர் அகவல் கூறுவது சனாதனத்திற்கு எதிர்ப்பாகத்தானே. எனவே, தொடர்ச்சியாகச் சனாதனம் இருப்பதாகப் பெருமை பேசுநர், தொடர்ச்சியாக அதற்கு எதிர்ப்பு இருப்பதையும் உணர்ந்து அடங்கி ஒடுங்க வேண்டும். பூணூல் அணிந்த பிராமணர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதற்குக் காவல் துறையும் நீதித்துறையும் ஊடகங்களுமே சான்றாகும்….