புவியின் சுழற்சியை முதலில் உணர்ந்த தமிழர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
(சேமக்குடுவையின் முன்னோடி – தொடர்ச்சி) அன்றே சொன்னார்கள் 7 புவியின் சுழற்சியை முதலில் உணர்ந்த தமிழர்கள் பழந்தமிழ் மக்கள் அறிவியல் நோக்கிலேயே எதனையும் சிந்தித்தனர். ஆனால், பிற நாடுகளில் அறிவியல் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டபொழுது அறிவியலாளர்கள் சமயவாதிகளால் தண்டிக்கப்பட்டனர்; உயிர்பறிக்கப்பட்டனர். 1548 இல் பிறந்த இத்தாலிய அறிவியலாளர் கியார்டனோ புருனோ (Giordano Bruno) எனப்பெறும் பிலிப்போ புருனோ (Filippo Bruno) அண்டங்களைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தியவர். 1584இல், முடிவற்ற அண்டமும் உலகங்களும் (Infinite Universe and Worlds) முதலான இரு நூல்களை வெளியிட்டார். சமய நம்பிக்கைக்கு…