வெருளி நோய்கள் 246 – 250 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 241 – 245 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 246 – 250 246. ஆசிரியர் வெருளி – Lusuophobia தன் ஆசிரியர் குறித்த அளவு கடந்த பேரச்சம் ஆசிரியர் வெருளி. சிலருக்கு வகுப்பிற்கு வரும் ஆசிரியர் அனைவர் மீதும் பேரச்சம் இருக்கும். சிலருக்கு வகுப்பாசிரியர், ஆங்கில ஆசிரியர், கணக்கு ஆசிரியர், தமிழாசிரியர், அறிவியல் ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர் என்பனபோன்று குறிப்பிட்ட ஓர் ஆசிரியர் அல்லது சில ஆசிரியர் மீது மட்டும் வெறுப்பும் பேரச்சமும் வரும். தன்னை இதற்கு முன்னர் தன்னையோ பிறரையோ…

அசோகர் காலமே வள்ளுவர் காலம்! – சி.இலக்குவனார்

அசோகர் காலமே வள்ளுவர் காலம்   வள்ளுவர் காலம் சங்கக் காலம் என்றோம். சங்கக் காலப் புலவர்களில் பலர் இவருடைய திருக்குறளை எடுத்தாண்டுள்ளார். மணிமேகலையாசிரியர் சாத்தனார் “தெய்வம் தொழான் கொழுநன் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழை என்ற பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்” என்று கூறுகின்றார். இதில் வள்ளுவர் மொழியை எடுத்தாண்டு அவரைப் பொய்யில் புலவர் என்று பாராட்டுவதையும் காண்கின்றோம். அதனால் வள்ளுவர் சாத்தனார் காலத்திற்கு முற்பட்டவர் என்று அறிகின்றோம். சாத்தனார் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும்…